உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Viral Video Russia Social Media
By Shadhu Shanker Jul 05, 2026 11:28 AM GMT
Report

சமூக ஊடகங்களில் பிரபலமான ரஷ்ய சாகசக் கட்டட ஏறுபவர்களான ஏஞ்சலா நிகோலாவ் மற்றும் இவான் பீர்கஸ் ஆகியோர், நியூயோர்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடத்தியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் கருப்பு நிற உடையணிந்து, எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஆன்டெனாவின் உச்சிவரை ஏறிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன.

தடுப்புக் காவலில் இருந்தவாறே காணொளி அழைப்புகளை மேற்கொண்ட ஹரக் கட்டா! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

தடுப்புக் காவலில் இருந்தவாறே காணொளி அழைப்புகளை மேற்கொண்ட ஹரக் கட்டா! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

அதன் பின்னர், "அதிகாரத்தின் மீதான காதலை விட, காதலின் சக்தி வென்றால் உலகம் அமைதியை அறியும்" என்று எழுதப்பட்டிருந்த பதாகையை விரித்த இவான் பீர்கஸ், ஏஞ்சலா நிகோலாவிடம் திருமண முன்மொழிவை முன்வைத்தார்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Viral Empire State Building Proposal

இந்த சம்பவத்திற்குப் பின்னர் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் மீது சட்டவிரோதமாக கட்டிடத்திற்குள் நுழைதல் (Burglary), பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படல் (Reckless Endangerment), சொத்துச் சேதம் ஏற்படுத்தல் (Criminal Mischief) உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளும், சட்டவிரோதமாக தனியார் சொத்திற்குள் நுழைந்தது (Criminal Trespass) தொடர்பான சிறிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

எம்பயர் ஸ்டேட் கட்டிட நிர்வாகத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த சம்பவம் நியூயோர்க் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக கையாளப்பட்டதாகவும், கட்டிடத்தில் இருந்த வாடகையாளர்கள், பார்வையாளர்கள் அல்லது கண்காணிப்பு தளத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

யோஷித ராஜபக்சவின் மோசடி! சிக்கலில் அநுரவின் மகன்

யோஷித ராஜபக்சவின் மோசடி! சிக்கலில் அநுரவின் மகன்

 மிக உயரமான கட்டிடங்கள்

உலகின் மிக உயரமான கட்டிடங்களில் பாதுகாப்பு உபகரணங்களோ, கயிறுகளோ இன்றி ஏறி சாகசம் செய்வதன் மூலம் ஏஞ்சலா நிகோலாவும் இவான் பீர்கஸும் சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளனர்.

சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்த ஏஞ்சலா நிகோலாவ், சிறுவயதிலிருந்தே ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற்றவர் என கூறப்படுகின்றது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Viral Empire State Building Proposal

பின்னர் மாஸ்கோவில் உள்ள உயரமான கட்டிடங்களின் கூரைகளில் இருந்து புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் இணையத்தில் பிரபலமான இவர், 2016ஆம் ஆண்டு இவான் பீர்கஸை சந்தித்தார்.

அதன் பின்னர் இருவரும் இணைந்து உயரமான கட்டிடங்களில் சாகச ஏற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கினர். USA Today வெளியிட்ட தகவலின்படி, அதே ஆண்டில் சீனாவின் தியான்ஜினில் அமைந்துள்ள Goldin Finance 117 கோபுரத்தில் மேற்கொண்ட ஏற்றமே, அவர்கள் இணைந்து செய்த முதல் பெரிய சாகசமாகும்.

2022ஆம் ஆண்டில், உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமான மலேசியாவின் Merdeka 118 கட்டிடத்தையும் இருவரும் வெற்றிகரமாக ஏறினர். இவான் பீர்கஸ் தனிப்பட்ட முறையிலும் பல உலகப் புகழ்பெற்ற கட்டிடங்களை ஏறியுள்ளார்.

அதிகரிக்கும் ஆபத்து! மக்களே அவதானம்..

அதிகரிக்கும் ஆபத்து! மக்களே அவதானம்..

திருமண நிச்சயதார்த்தம்

அவற்றில் பிரான்சின் Eiffel Tower, சீனாவின் Shanghai Tower, ஷென்ழெனில் அமைந்துள்ள Shun Hing Square ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இருவரின் சாகச வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Viral Empire State Building Proposal

அவற்றில் 2024ஆம் ஆண்டு வெளியான நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படமான Skywalkers: A Love Story குறிப்பிடத்தக்கது. மேலும், ஏஞ்சலா நிகோலாவ் On the Edge of Freedom மற்றும் Who Is Next? ஆகிய ஆவணப்படங்களிலும் இடம்பெற்றுள்ளார்.

சாகசப் பயணங்களைத் தவிர, இவான் பீர்கஸ் இசை உருவாக்குபவராகவும், ஏஞ்சலா நிகோலாவ் ஓவியக் கலைஞராகவும் செயல்பட்டு வருகிறார்.

மேலும், அவருக்கு நடனம் மற்றும் அக்ரோபாட்டிக்ஸ் துறைகளிலும் பயிற்சி உள்ளது. குறித்த திருமண நிச்சயதார்த்தம் ஜூலை 1ஆம் திகதி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் நடைபெற்றது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US