யாழில் வீடொன்றில் புகுந்த மர்மநபர்கள் அட்டகாசம் - குடும்பஸ்தர் படுகாயம் (Photos)
யாழ்பாணத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
யாழ் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்ம நபர்கள் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்குமார்(41) என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.
வன்முறை கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதலை மேற்கொண்டதுடன்,
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும், பொருட்களையும் அடித்து நொறுக்கி அட்டகாசம்
புரிந்துள்ளனர்.
வீட்டில் இருந்த பெண்களையும் வாளினை காட்டி அச்சறுத்தி, அவர்களின் பெறுமதி வாய்ந்த கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
