புதுகுடியிருப்பில் வயோதிப தம்பதியினர் மீது வாள்வெட்டு தாக்குதல் : கொள்ளையர்கள் அட்டகாசம்
வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்ணின் மீது சராமாரியான தாக்குதல்
மேற்கொண்டுள்ளதுடன் வயோதிப தந்தை மீதும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெண்மணியின் கழுத்தில் மஞ்சல் கயிற்றில் இருந்த முக்கால் பவுண் தாலியினை கொள்ளையர்கள் அறுத்துள்ளதுடன் வயோதிபர் மீதும் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான வயோதிப தம்பதிகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக
தெரிவித்துள்ளனர்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
