நீதிமன்றம் சென்றவருக்கு நடுவீதியில் வாள்வெட்டு! யாழில் அதிர்ச்சி சம்பவம்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்கச் சென்றவர் மீது இன்று (19) சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மேலதிக விசாரணை
ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, அராலி சந்திக்கு அருகில் மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.