யாழில் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் யுவதி மீது வாள் வெட்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் - நீர்வேலியில் யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு (09.09.2023) இடம்பெற்றுள்ளது.
ஊடக நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
