ஆரையம்பதியில் வாள்வெட்டு தாக்குதல்: கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
மட்டக்களப்பு - ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (24.02.2025) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ இருந்த அறைக்கு முகத்தை மூடி வந்த நபர்: அடுத்தடுத்து துப்பாக்கிச்சூட்டு சத்தம் - வழங்கப்பட்டுள்ள சாட்சி
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரு சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாள்வெட்டு தாக்குதல்
ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வாள்களுடன் நுழைந்த குழு விளையாடிக் கொண்டிருந்த சிலர் மீது துரத்தி துரத்தி வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தப்பிஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று (23) இரவு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |