தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : கேள்வி எழுப்பிய சஜித்
நாட்டில் தொடர்ந்து பதிவாகும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும் அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி கூறுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதோடு, இது தேசிய பாதுகாப்புக்கு பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தது.
எனினும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு குறைபாடுகள்
அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வு தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப் பெற்ற பின் அது குறித்து நடவடிக்கைகளை எடுக்க இதைவிடவும் முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |