சுவிட்சர்லாந்தில் மகளுக்கு நேர்ந்த கதி: மன்னிப்பு கோரிய இலங்கை தாய்
சுவிட்சர்லாந்தில் செங்காலன் மாகாணத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தாயொருவர் தனது பத்து வயது பெண் குழந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியமை மற்றும் துன்புறுத்தியமை தொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரும் குறித்த பெண்ணுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த தாய் அதே சிசிடிவி முன் தனது பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது போன்றதொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
மன்னிப்பு கோரிய தாய்
தனது தவறை தான் உணர்ந்துள்ளதாகவும், குறித்த காணொளி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
என்ற போதும் தற்போது குறித்த காணொளியும் தற்போது பேசுபொருளாகியுள்ளதுடன், குறித்த தாய் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.


ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
