ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைக்கு எதிரான முன்மொழிவை நிராகரிக்க வலியுறுத்திய சுவிஸ் அரசு!
சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான புதிய உடன்படிக்கையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘கொம்பாஸ்’ முன்மொழிவை நிராகரிக்குமாறு சுவிஸ் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
கடந்த தலைமுறையில் இரு தரப்பு பொருளாதார உறவுகளில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரச உடன்படிக்கைகள் மீதான கட்டாய சனநாயக வாக்கெடுப்புகளின் அளவுகோலை விரிவுபடுத்துவதை இந்த முன்மொழிவு இலக்காகக் கொண்டுள்ளது.
சர்வதேச உடன்படிக்கை
எனினும், இந்த முன்மொழிவானது சட்ட நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதுடன், சுவிட்சர்லாந்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஆளும் பெடரல் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவு மட்டுமின்றி, 26 கன்டன் மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவும் பெறப்பட வேண்டும் என்ற நிலையை இந்த முன்மொழிவு கோருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த ஐரோப்பிய ஒன்றிய-சுவிஸ் ஒப்பந்தம் தற்போது சுவிஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் உள்ளதுடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் இது மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam