பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுவிஸ் தூதரகம் மீண்டும் திறப்பு: இஸ்ரேலுக்கான ஆயுத உரிமங்கள் இரத்து
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக நிலவி வந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தனது தூதரகத்தை, சுவிட்சர்லாந்து அரசு மீண்டும் படிப்படியாகத் திறக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த மார்ச் 11 முதல் மூடப்பட்டிருந்த இந்தத் தூதரகத்திற்கு, முதற்கட்டமாக ஒரு சிறிய அளவிலான இராஜதந்திரிகள் குழு இந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போர்ச் சூழல் நிலவும் வேளையில், ஈரானில் தனது தூதரகப் பணிகளை மீண்டும் தொடங்குவது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இராணுவ நடவடிக்கை
ஆயுதமேந்திய நடுநிலைமை (Armed neutrality) என்ற நீண்டகாலக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சுவிட்சர்லாந்து, இந்தப் போர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான அனைத்து புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களையும் சுவிட்சர்லாந்து நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கும் அந்நாடு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தப் போர் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்ப்பதுடன், சர்வதேச விதிகளின்படி நடுநிலை வகிக்கவே சுவிட்சர்லாந்து இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan