அமெரிக்காவில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இளம் பெண்
அமெரிக்காவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 29 வயதான ஹஷினி ஹேரத் என்ற இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இளம் பெண் பலி
தெற்கு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது, ஹஷினி ஹேரத் ஓட்டி சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது.

இந்த விபத்தில் ஹஷினி ஹேரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியும், அதில் பயணித்தவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதிக்கு எதிராக பொலிஸார் போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
மகிழ்ச்சியான வாழ்க்கை
கடந்தாண்டு திருமணமான நிலையில், கணவனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை முன்னெடுக்க அமெரிக்கா சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஹஷினி, மிகவும் அன்பான மற்றும் கனிவான பெண் என அவரது நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். அவரது திடீர் மறைவு குடும்பத்தினருக்கும் இலங்கையர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹஷினியின் பூதவுடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, ரோசெஸ்டர் இலங்கை அமெரிக்க சங்கத்தினால் GoFundMe நிதியுதவித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது