காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து நீதியமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து பதில் தூதுவர் ஒலிவியர் பிராஸும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து பதில் தூதுவர் ஒலிவியர் பிராஸுக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு நேற்று (22.09.2026) கொழும்பிலுள்ள நீதி அமைச்சில் நடைபெற்றது.
முக்கிய விடயங்கள்..
நீண்டகாலமாக நீதிக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் அரசின் தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கான எதிர்கால நகர்வுகள் குறித்து இரு தரப்பினரும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இலங்கையின் சமகால அரசியல் மற்றும் சமூக நிலைவரங்கள் குறித்துச் சுவிட்ஸர்லாந்து பதில் தூதுவருக்கு விளக்கமளித்த நீதி அமைச்சர், இவ்விரு துறைகள் சார்ந்த அரசின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் தீர்மானங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஜஸ்டின் போய்லாட்டும் இந்தச் சந்திப்பில் உடனிருந்து பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலையற்றப் பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவை..! சபையில் சஜித் பிரேமதாஸ கேள்வி
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri