பாடசாலைகள், பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போது கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில், பொறுப்பான முறையில் செயற்படத் தவறியமை மற்றுமொரு கொத்தணிக்கு வழிவகுக்கும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று பரவுவது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட வழிவகுக்கும்.
மேலும் கோவிட் தொற்று அறிகுறி கொண்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் அவர்கள் சமூகத்துடனான தொடர்பினை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாகப் பின்பற்றப்படாவிட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
