இலங்கையில் ஆபத்தான நபர் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்கு தப்பியோட்டம்: விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் தேடப்படும் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நபர் குடும்பத்துடன் ஐரோப்பா தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோண்டா ரஞ்சி என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் ரஞ்சித் குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளை டுபாய் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
10 வருட விசா
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்புச் செயலாளரின் கொலை தொடர்பாக கோண்டா ரஞ்சி என்கிற ரஞ்சித் குமார பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

சந்தேக நபர் தற்போது டுபாய் பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கோண்டா ரஞ்சி என்கிற ரஞ்சித் குமார, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோல்டன் விசா அல்லது 10 வருட விசா வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri