காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளிவந்துள்ள புதிய தகவல்

Jaffna Parliament of Sri Lanka Trincomalee Weather
By Mayuri Jan 09, 2026 02:00 PM GMT
Report

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது இன்றைய தினமே இலங்கைக்குள் நுழையும் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளிவந்துள்ள புதிய தகவல் | Deep Depression Southwest Bay Of Bengal Located

இந்தத் தாழ்வு மண்டலம் நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளிவந்துள்ள புதிய தகவல் | Deep Depression Southwest Bay Of Bengal Located

முதலாம் இணைப்பு

நாட்டில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளியாக மாறும் என்று எந்த கணிப்பும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர என தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (09.01.2026) கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆபத்து மண்டலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கோர விபத்து - இலங்கை தமிழ் பெண் பலி

கனடாவில் கோர விபத்து - இலங்கை தமிழ் பெண் பலி

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நிலை

இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை 4 மணிக்கு விடுத்துள்ள எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பிற்கு அமைய வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளிவந்துள்ள புதிய தகவல் | Deep Depression Southwest Bay Of Bengal Located

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. நாட்டின் வடக்கு பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில் இது 70 கி.மீ வேகத்திலான கடும் காற்றாக அதிகரிக்கலாம். வடமேல், மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US