முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (09) கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மதுஷ் விவகாரம்
2019ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் மீதான விசாரணைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது, 2001ஆம் ஆண்டு இராணுவத்தால் டக்ளஸுக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, மதுஷிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணை குறித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே, தற்போது அவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam