உலக அளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள முதலிடம்
பணி ஓய்வுக் காலத்தை கழிப்பதற்கு மிகவும் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஓய்வூதிய (Global Retirement Index) தரவரிசையின் வாழ்க்கச் செலவு பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற, வாழவும் ஓய்வு பெறவும் மிகவும் மலிவான ஐந்து நாடுகளை இன்டர்நெசஷல் லிவிங் இதழ் அடையாளம் கண்டுள்ளது.
காலநிலை, சுகாதார வசதிகள், வீசா நடைமுறைகள், வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிய பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை முதல் இடத்தை பிடித்துள்ளது. குறைந்த செலவில் கிடைக்கும் உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மற்றும் எளிதில் பெறக்கூடிய ஓய்வூதிய வீசாக்கள் இதற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒரு தம்பதியினர் மாதத்திற்கு சுமார் 2,200 அமெரிக்க டொலர் செலவில் வசதியான, செழிப்பான வாழ்க்கை வாழ முடியும் எனவும், சீரான செலவுத் திட்டத்துடன் மாதத்திற்கு 1,000 டொலர் செலவிலும் வாழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தர வரிசையில் இரண்டாம் இடத்தினை வியட்நாம் பெற்றுக்காண்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஹனோயில் சராசரி வாழ்வுச் செலவு மாதத்திற்கு 1,800 டொலருக்கு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குறைந்த வாடகை வீடுகள் மற்றும் மலிவான சுகாதார சேவைகள் வியட்நாமின் சிறப்பம்சங்களாகும்.
இந்த தர வரிசையில் மூன்றாம் இடத்தை தாய்லாந்து பெற்றுள்ளது. சியாங் மை போன்ற நகரங்களிலும் ஹுவா ஹின் போன்ற கடற்கரை நகரங்களிலும் ஒரு தம்பதியினர் மாதத்திற்கு சுமார் 2,000 டொலர் செலவில் நிம்மதியான வாழ்க்கை நடத்த முடியும். மலிவான வீடுகள், எளிதில் அணுகக்கூடிய சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இங்கு கிடைக்கின்றன.
இந்த பட்டியலின் நான்காம் இடத்தில் இந்தோனேசியாவின் பாலி உள்ளது. கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவை மாதத்திற்கு 900 டொலருக்கு குறைவாக வாடகைக்கு பெற முடியும். பாலியில் மாதாந்த வாழ்வுச் செலவு 1,400 டொலரில் சமாளிக்க முடியும், மேலும் தரமான சுகாதார வசதிகளும் உள்ளன.
இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை மலேசியா பெற்றுள்ளது. பினாங்கில் மலிவான குடியிருப்புகள் கிடைப்பதுடன், ஒரு தம்பதியினர் மாதத்திற்கு சுமார் 2,500 டொலர் செலவில் வசதியாக வாழ முடியும். அங்கு பொது போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகள் நம்பகமானதும் குறைந்த செலவானதுமாகும்.
இந்த இடங்களை தனித்துவமாக்குவது குறைந்த விலை மட்டுமல்ல, அதனுடன் கிடைக்கும் வாழ்க்கை முறையே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam