டயகம வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மறுஅறவித்தல் வரை இடைநிறுத்தம்
நுவரெலியா - டயகம வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு, கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, லிந்துலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியா - டயகம வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு, கோவிட் வைரஸ் தொற்று இன்று (19) உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வைத்தியருடன் தொடர்பைப் பேணிய 18 உத்தியோகஸ்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்களை வைத்திய சிகிச்சைக்காக அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்குச்
செல்லுமாறு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் குறிப்பிட்டுள்ளார்.
