இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயணிகள், தங்களிடம் உள்ள வெளிநாட்டு நாணயங்களை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்ற நிலையங்கள் அல்லது உரிமம் பெற்ற வங்கிகள் மூலமாக மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் அனுமதி பெற்ற வங்கிகள்
அங்கீகரிக்கப்படாத நபர்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்பவர்கள், போலி நாணயத்தாள் மோசடிகளுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் தங்களின் பணப் பரிமாற்றங்களை அரசாங்கத்தின் அனுமதி பெற்ற வங்கிகள் அல்லது நிலையங்கள் மூலமாக மட்டுமே பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேசச்ாளர் எப்.யு வூட்லர் தெரிவித்துள்ளார்.
அங்கீகாரம் இல்லாத சட்டவிரோத நபர்களிடம் பணத்தை மாற்ற முயம்போது, போலி நோட்டுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதுடன், ஏனைய ஏமாற்று வேலைகளுக்கும் அவர்கள் சிக்க நேரிடும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri