ஒக்ஸிஜன் கொள்வனவு உத்தரவை இடைநிறுத்த முடிவு!
எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு தேவைப்படும் 1,080 டன் திரவ ஒக்ஸிஜனை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்வதற்கான உத்தரவை இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.எம்.சமான் குசுமசிறி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது ஒக்ஸிஜன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள கணிசமான சரிவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் 135 தொன் ஒக்சிஜனின் நாளாந்த நுகர்வு, இப்போது 70 தொன்னாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னர் 1000 க்கு மேல் இருந்த ஒக்ஸிஜனைச் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 560ஆக குறைந்துள்ளது என்றும் ஆர்.எம்.சமான் குசுமசிறி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜனைக்கொண்டு, இப்போது இலங்கை தமது தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
