இலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்! அரசாங்கம் நடவடிக்கை
நாட்டின் மொத்த முகநூல் கணக்குகளில் உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடை நிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்
இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்த, அரச நிறுவனங்களினூடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழக்கத்திலுள்ள சட்டத்திற்கமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரிமையாளர்கள் இல்லாத முகநூல் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இளம் சந்ததியினரை வழி கெடுக்கும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இது வழி வகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
