சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் கைப்பற்றல் - இரண்டு சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு செம்பியன்பற்று தாளையடி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிப்பரொன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் மருதங்கேணி பொலிஸாரால் நேற்றிரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை
குறித்த டிப்பரில் பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்று வந்த நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலமையில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குடாரப்பு பகுதியில் வைத்து குறித்த கள்ளமண் ரிப்பர் மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட டிப்பரையும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்காக முன்னெடுக்கப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri