கொழும்பிலிருந்து சென்ற பேருந்தில் சிறுவனின் பையில் சிக்கிய மர்மம்
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தில் சிறுவனின் பையில் இருந்து பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டதாாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை புத்தல பொலிஸார் புத்தல நகரில் சோதனையிட்டனர்.
119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலர்ந்த கஞ்சா
இதன்போது ஒரு சிறுவனின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

பேருந்தில் இருந்த சிறுவனின் தந்தையும், கஞ்சாவின் உரிமையாளருமான அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பலஹருவா, குடா ஓயா பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராகும். சந்தேக நபருடன் வழக்குப் பொருட்களும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.ஜே. பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்... 11 நிமிடங்கள் முன்
இதுவரை பாடல் நிகழ்ச்சிகளில் நடக்காத ஒரு பிரம்மாண்ட பரிசுத் தொகை.... அறிவித்த சரிகமப லில் சாம்ப்ஸ் டீம் Cineulagam
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri