யாழில் பெருமளவான கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (29.10.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக வாகனத்தில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும் போது கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களில் ஒருவர் மாதகல் பகுதியையும், மற்றையவர் யாழ்ப்பாண பகுதியையும் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam