மகன் விற்பனைக்கு..! பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெற்றோரின் செயல்
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெற்ற மகனை விற்பனை செய்ய தயாரான பெற்றோரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்றப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோரே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தந்தை, காந்தி பூங்கா அருகே “என் மகன் விற்பனைக்கு” என்ற பதாகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தொல்லை
இவர்களுக்கு சுமார் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை கடன் இருக்கும் நிலையில், கடன் அளித்தவர்கள் இவர்களுக்கு விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் வழி தெரியாமல் திணறிய அலிகார் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது மகனை விற்கும் விபரீத முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
