மதிப்பு வாய்ந்த திமிங்கில விளைப்பொருளை கடத்த முயன்ற நால்வர் கைது
தமிழகம் தூத்துக்குடி கடலோரப் பகுதியிலிருந்து 31.67 கோடி ரூபாய் மதிப்புள்ள 18.1 கிலோ அம்பர்கிரிஸ் (ambergris) என்ற விந்தணு திமிங்கலங்களின் விளைபொருளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது.
தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் இருந்து கடல் வழியாக அம்பர்கிரிஸ்ஸை இலங்கைக்கு கடத்த ஒரு குழு முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கேளரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமிங்கலங்கள் குறித்து அச்சம்
இதன்போது கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டு 18.1 கிலோ அம்பர்கிரிஸ் பொலிஸாரனால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அம்பர்கிரீஸ் என்னும் மெழுகுப்பொருள், இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட பொருளாகும். இந்தநிலையில் காவல்துறையினரால் அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்ட சம்பவம் விந்தணு திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டனவா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் 54 கோடி ரூபா மதிப்புள்ள அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
