அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்!மேலும் இரு ஐஸ் போதைபொருள் கொள்கலன்கள்...
ஐஸ் போதை பொருள் கொள்கலன் தகவல் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துக்குவுக்கு அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளன.
இந்த கொள்கலன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் விடுதியொன்றில் தங்கியிருந்த மூன்று பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி!மெல்பேர்ன் நகரில் நடந்த அதிர்ச்சிக்கும் சம்பவங்கள்...
கடத்தல் வலையமைப்பின் தொடர்புகள்
பாகிஸ்தானியர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
அதில் ஒன்று ஏற்கனவே சுங்கப் பரிசோதனையில் உள்ளது; மற்றொன்று கப்பல் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளது. அவை இரண்டையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கைதுகளின் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதில் 'அங்கொட பியந்த' அல்லது 'கார்கோ பியன்' ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது.
ஆனால், தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் மூலம் இவர்கள் யாருக்கும் இதில் நேரடித் தொடர்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த பாகிஸ்தானியர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு, இலங்கையிலுள்ள வர்த்தகர்களுடன் இணைந்து செய்யும் வியாபாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த இரண்டு கொள்கலன்களையும் கொண்டுவந்துள்ளனர் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு உள்ளது.
அந்த இரண்டு கொள்கலன்களையும் விடுவித்துக்கொள்வதற்காகவே இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்துள்ளனர். இங்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தங்களது கடமையை சரியாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட பணியகத்தால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம்
கடந்த மாதம் 18 ஆம் திகதி இதற்கான நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டபோதிலும், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது தடவையாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவர்கள் சோதனையை மேற்கொண்டுள்ளனர். ஆனால், முதல் நீதிமன்ற உத்தரவு நிராகரிக்கப்பட்ட விபரத்தை உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கோ அல்லது ஏனைய பிரிவுகளுக்கோ அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இந்த விசாரணையை மெதுவாகச் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் ஆரம்பத்தில் இருந்தே இந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தது.
சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்து, இந்த கொள்கலன்களை எக்காரணம் கொண்டும் வெளியே விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
ஆனால், அதைத் திறப்பதற்கு நீதிமன்ற உத்தரவு தேவைப்பட்டதாலும், சுங்கப் பகுதியினரின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருந்ததாலுமே தாமதம் ஏற்பட்டது.
அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் ஈரான், ஆப்கானிஸ்தான், பலுகிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரமாக இருக்கும் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானியர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
அதில் ஒன்று ஏற்கனவே சுங்கப் பரிசோதனையில் உள்ளது; மற்றொன்று கப்பல் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளது. அவை இரண்டையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கடத்தலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு நேரடியாக ஈடுபட்டுள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் வெறும் இறக்குமதி செய்யும் வர்த்தகப் பங்காளிகள் மட்டுமே. பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது இன்னும் வெளிவரவில்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22