அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி!மெல்பேர்ன் நகரில் நடந்த அதிர்ச்சிக்கும் சம்பவங்கள்...
நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
தொழிலதிபர் நிமல் பெரேராவை நாமல் தொடர்பில் சாட்சியமளிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவிலும் பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்
நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார்.
ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது.
கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி
நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri