நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் கிழமைகளில் காத்திருக்கும் அபாயம்! பிணை பெறுவதில் பாரிய சிக்கல்...
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கும் இலஞ்ச ஊழல் வழக்காக பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் ராஜபக்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிரிஷ் வழக்கில் 70 மில்லியன் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இது சம்பந்தமாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் 'பீ' அறிக்கை சமர்ப்பித்தால் அந்த வழக்கும் இதனுடன் சேர்ந்து, நாமலுக்கு பிணையில் செல்லும் அனுமதியில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் வருகை
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் ஒன்று நிகழவுள்ளது.
உலகின் மிகப்பெரிய இரு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “எயார்பஸ்” நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களை வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மட்டுமே நாமல் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார் என்பதல்ல. நாமலை இதில் தொடர்புபடுத்துவதற்கு பிரதானமாக சான்றுகள் பல சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதன்படி, இலங்கையில் உள்ள மேலும் சில சாட்சியாளர்கள் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகக் கூறப்படும் வேளையில், அதில், ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு சாரதியும் அடங்கியுள்ளனர்.
வெளிச்சத்திற்கு வரும் ஆதாரங்கள்
எனவே இது நிமலின் வாக்குமூலம் மட்டுமல்ல, எயார்பஸ் நிறுவனத்தின் சாட்சியங்களில் நாமலுடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றன.

நீதிமன்ற தகவல்களின் படி, எயார்பஸ் நிறுவனத்தில் சாட்சியம் அளிப்பது யார் அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதாவது, ஒரு இலஞ்ச வழக்கில் இலஞ்சம் கொடுத்த தரப்பு தான் இலஞ்சம் கொடுத்ததாகக் கூற வேண்டும்.
மேலும் அந்த இலஞ்சம் கொடுத்த நபருடன் இந்த குறிப்பிட்ட நபர் எவ்வாறு தொடர்புபடுகிறார் என்பது பற்றிய தெளிவான சான்றுகளையோ அல்லது இலஞ்சம் கொடுத்த தரப்பின் வாக்குமூலத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது கூறப்படும் தகவல்களின் படி இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening