4 நாட்களாகத் தேடப்பட்ட சந்தேகநபர் உடப்புசல்லாவயில் கைது..!
தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி, 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(29.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 25ஆம் திகதி தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் உள்ள 5 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளதாக கடையின் உரிமையாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
5 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு
திருட்டு சம்பவம் தினத்திற்கான சிசிடிவி காட்சிகளும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், முறைப்பாடு பதிவு செய்து 2 நாட்களாகியும், உரிய பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அவர் சமூக வலைத்தளங்களில் செய்தியை பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, 24 மணித்தியாலங்களில் சந்தேக நபர், உடப்புசல்லாவ - வோல்டிமார் தோட்டத் தொழிற்சாலைப் பிரிவில் நடமாடிய பொழுது பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பிரதேச இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து சந்தேகநபரைப் பிடித்து உடுப்புசல்லாவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபரை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்வதற்கு ஊடகங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியான செய்திகள் பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ள பிரதேச இளைஞர்களும் பொதுமக்களும், குறித்த செய்திகளைப் பிரசுரித்த ஊடகப் பக்கங்களின் சேவையை பாராட்டி வருகின்றார்கள்.
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: மாபெரும் கவனயீர்ப்பு மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு