பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு
முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டு வீச முயன்ற சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பலாங்கொடை - மனஹேன, தலகஸ்பே பிரதேசத்தில் முறைப்பாடொன்றை விசாரிக்கச் சென்ற இரண்டு பொலிஸார் மீது நேற்று மாலை கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன்போது தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிளை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.
| இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு |
பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து, பிட்டிகல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதன்போது, சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார்.
சந்தேகநபரைத் தடுக்க முயன்றபோது, தன்னிடமிருந்த கைக்குண்டு மூலம் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க அவர் முயற்சி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் துப்பாக்கிச்சூடு
அதன்போது பொலிஸ் அதிகாரிகள் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவர் இன்று காலை உயிரிழந்தார் என்று பொலிஸ்
ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam