இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் பிடிகல, தல்கஸ்பே பிரதேசத்தில் முறைப்பாடொன்றை விசாரிக்கச் சென்ற இரண்டு பொலிஸாரை கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் இன்று காலை நடைபெற்றுள்ளது.
முறைப்பாடு ஒன்று தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் சிறுமுறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் மீதே இவ்வாறு கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பாலியல் பலாத்காரம், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிஸார் துப்பாக்கிச் சூடு

அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக கேள்வியுற்று மேலதிக பொலிஸ் குழுவொன்று அங்கு சென்ற போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
அதனையடுத்து பொலிஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சந்தேக நபர் எல்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
கத்தியினால் வெட்டப்பட்ட இரண்டு பொலிஸாரும் எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| இராணுவத்தின் கொடூரத்தால் தமிழர்களுக்கு எவ்வளவு வேதனை..! சிங்கள இளைஞன் வெளியிட்ட தகவல் |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri