ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த பல வருடங்களாக கேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் போல் சென்று ஐஸ் போதை பொருளை பெற்றுக் கொண்ட சமயம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகமிடமிருந்து 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 1000 ருபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு திருட்டு சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குறித்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri