கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிர்மாய்ப்பு
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர், விசாரணை கூண்டில் உயிர் மாய்த்து கொண்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், இன்றைய தினம் (25.07.2025) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
விசாரணை கூண்டு
அவர், விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 12.08 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிர் மாய்த்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என்ற 66 வயதுடைய குறித்த சந்தேக நபர், கிளிநொச்சி தொடருந்து நிலைய வீதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri