பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம்! சி.சி.டி.வி காணொளியில் பதிவான சந்தேகநபர் கைது
கொழும்பு − பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு கைக்குண்டை கொண்டு வந்ததாக கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டி − பனாமுர பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையினால் வெளியிடப்பட்ட சி.சி.டி.வி காணொளியில் வருகைத் தந்ததாக கூறப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அண்மையில்,பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் ஆலய (All Saint's Church) வளாகத்தில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்துடன், 14 பேரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கைக்குண்டை வைப்பதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
