யாழில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(14) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொட்டடி - கண்ணாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 2 கிலோ 790 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவாவும், 50 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
கைது
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம் எம்.பி தொடர்பில் வெளியான மற்றுமொரு குரல்பதிவு! வீடுகளுக்கு தேடிச்சென்று அச்சுறுத்தும் கும்பல்


ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam