இரு வாரங்களில் 16000இற்கும் மேற்பட்டோர் கைது!
நாடு முழுவதும் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது 16 ஆயிரத்து 738 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பில் நாடளாவிய ரீதியில் 16 ஆயிரத்து 915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க
மேலும் 10 இலட்சத்து 15 ஆயிரத்து 632 கஞ்சா செடிகளும், 4 கிலோ 847 கிராம் குஷ் போதைப்பொருளும், 25 கிலோ 483 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 41 ஆயிரத்து 874 மாத்திரைகளும் , 36 கிலோ 176 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 313 பேரைப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |