போதைப் பொருள் வர்த்தகத்துடன் முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு
நாட்டின் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் போதைப் பொருளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஆதரவினை வழங்குகின்றோம். அதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
சரியான முறையில் அணுகப்படவில்லை
எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவத்தினரின் தலையீடு இன்றி மேற்கொள்ள முடியாது நான் அதனை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

தெற்கில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருக்கின்றார்கள் கடந்த 17 ஆண்டுகளாக இந்த பிரச்சினை சரியான முறையில் அணுகப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்த பிரச்சினை தெற்கிலும் பாரிய அளவில் பூதாகாரமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் யாரையும் காப்பாற்ற முனைய கூடாது வடக்கு கிழக்கில் காணப்பட்ட போதைப் பொருள் பிரச்சினை தற்பொழுது நாடு முழுவதும் புற்றுநோய் போல் பரவி உள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.