புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய 5 மாணவர்கள் 198 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்து ஒரு மாத காலத்துக்கு அதற்கான பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி கூற வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை
பெறுபேறுகளின் அடிப்படையில் 198 புள்ளிகளை 5 மாணவர்களும், 197 புள்ளிகளை 4 மாணவர்களும், 196 புள்ளிகளை 8 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
மேலும் கல்வி மறுசீரமைப்புக்கான அனுமதி கிடைக்கப் பெறும் போது, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
