சுசிலின் பதவியை பறித்த கோட்டாபய! தொலைபேசியில் அழைப்பெடுத்து பேசிய மகிந்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராஜாங்க அமைச்சுப்ப பதவியை சுசிலிடமிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கியிருந்தார்.
இதன் பின்னர் பிரதமர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றியதாக சுசில் பிரேமஜயந்த தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று மாலை முறைப்படி எழுத்து மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில், தனது அரசியலுக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும், புதிய பயணத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan