விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பில் சுசந்திகா முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு
விளையாட்டுத்துறை அமைச்சில் இருப்பவர்கள் அனைவரும் கள்வர்கள் என முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து தனது ஐம்பதாவது அகவையை கொண்டாடுவதற்காக தாய் நாட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விளையாட்டுத்துறை
மேலும் கருத்து கூறிய அவர்,
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வருபவர்கள் அனைவரும் வர்த்தகம் செய்பவர்கள்.இவர்கள் விளையாட்டுத்துறைக்கோ அல்லது வீரர்களுக்கோ சிறந்த சேவை வழங்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல.
குடும்பம் சகிதம் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். நான் கூட ஏதென்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் கிராமத்துக்கு சென்றதில்லை. ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சில் உள்ள சிற்றூழியர்கள் கூட வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் விளையாட்டுத்துறை பற்றி கதைக்க எனக்கு விருப்பவில்லை.மேலும் வீரர்களும் தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கும் அவர்களின் தனிப்பட்ட இலாபத்திற்கே செயற்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam