நாட்டில் திடீரென தடை செய்யப்பட்ட 10 மருந்துகள்
நாட்டில் மருந்துகள் தொடர்பில் மீண்டும் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் அய்.டி.எச் வைத்தியசாலையில் ஏற்பட்ட இரு மரணங்கள் மருந்துகள் ஒவ்வாமையால் ஏற்பட்டதா? என பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
மருந்துகளால் ஏற்பட்ட ஒவ்வாமை
அய்.டி.எச் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு தடுப்பூசியில் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என குறித்த மருந்தை மருந்துகள் கட்டுப்பாட்டு சபை அண்மையில் தடை செய்தது.
அந்த மருந்து தொடர்பில் கண்டி வைத்தியசாலையில் நடத்திய பரிசோதனையில் அதில் கிருமிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் தடை செய்யப்பட்டிருக்கும் ஒன்றன்செற்றோல் என்ற மருந்து இந்திய நிறுவனத்திலிருந்து 270,000 குப்பிகள் கொண்டு வரப்பட்டு 220,000 மருந்து குப்பிகள் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில் சில மருந்துகளிலேயே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஆனால் நேற்று மேலும் 10 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் மீண்டும் மருந்துகள் தொடர்பில் பாரிய நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam