விவசாயத்தை அழிக்கும் விலங்குகளின் கணக்கெடுப்பு வெற்றி! நாமல் கருணாரத்ன அறிவிப்பு
விவசாயத்தை அழிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு வெற்றிகரகமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) அறிவித்துள்ளார்.
கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) நாடளாவிய ரீதியில் குரங்குகள், மர அணில்கள், மயில்கள் போன்ற விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது கிராம அலுவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் ஆகியோரும் இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஒத்தாசை வழங்கியிருந்தனர்.
கணக்கெடுப்பு வெற்றி
தனியார் காணிகள், பொது இடங்கள், மதவழிபாட்டு பிரதேசங்கள், புனித பூமிப் பிரதேசங்கள் என்பவற்றில் காலை எட்டு மணி தொடக்கம் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கிடையே இன்று மேற்கொள்ளப்பட்ட விவசாயப் பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு வெற்றி அடைந்துள்ளதாக கமத் தொழில் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |