மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில், நேற்றைய தினம் (06.06.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்திய (India) தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள். இந்து சமுத்திரத்தின் மத்தியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களை பொறுத்த வரையில், பல வகையில் இந்திய அரசாங்கம் உதவி புரிந்துள்ளது. இருப்பினும், அவர்களின் இனப்பிரச்சினைக்கு இது வரை தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே, இது தொடர்பில் மோடி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
