வாடகைத்தாய் முறை மனிதாபிமானமற்றது: இத்தாலி பிரதமர் எதிர்ப்பு
வாடகைத்தாய் முறையானது மனிதாபிமானமற்றது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் தலைநகரமான உரோமில் நடைப்பெற்ற இளைஞர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வாடகைத் தாய் முறை
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.

ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது பணம் செலுத்தப்படாமலும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்ளும் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் $1 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமூலம் நடைப்படுத்தப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri