இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் கிழங்குப் பொரி விற்பனை நிலையங்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பரிசோதனை நடவடிக்கையானது நேற்று (24) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 39 உணவகங்கள்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் விசேட பொதுச் சுகாதார பரிசோதகர் சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் நான்கு குழுக்களாக இணைந்து நடத்திய இச்சோதனையில் 39 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த பரிசோதனையின் போது மனித நலனுக்கு பொருத்தமற்ற மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் தயாரிக்கப்பட் உணவுகள் விற்பனை செய்யப்பட்ட, சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தூய்மையற்ற பாத்திரங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.










