அரச பேருந்தில் ஏற்பட உள்ள அதிரடி மாற்றங்கள்...! பெண்களுக்கு விமான பணிப்பெண் சீருடை
இலங்கை போக்குவரத்து சபையில் பெண் ஊழியர்கள் உட்பட 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை போக்குவரத்து சபையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடந்து வருகின்றன.
பெண்களுக்கான சீருடை
ஆட்சேர்ப்புக்கு அப்பால், பெண்களை பணியமர்த்துவதற்கு முன்பு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைப் பேருந்துகளில் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதே ஆரம்ப திட்டம். இது கட்டம் கட்டமாக நடைபெறும்.
பெண்களுக்கான சீருடையை விமானப் பணிப்பெண் மட்டத்திலும் வடிவமைத்துள்ளோம். இளைய தலைமுறையினர் அரசப் பேருந்துகளை கவர்ச்சிகரமான பணியிடமாக பார்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



