20 மில்லியன் ரூபா தங்கத்துடன் சிக்கிய விமானப்படை அதிகாரி
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை விமானப்படையின் (SLAF) புலனாய்வு அதிகாரி ஒருவர், 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வரும் 37 வயதான அதிகாரி, வருகை முனையத்திலிருந்து பணியாளர் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
40 தங்க பிஸ்கட்டுகள்
இதன் பின்னர் அவரின் உடல் ஸ்கேன் செய்யப்பட்ட போது, 10 அல்லது 20 கிராம் எடையுள்ள 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்டுகளை அவர், தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 20 மில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



