கடந்த சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி
மட்டக்களப்பில் கடந்த சாதாரண தர பரீட்சையில் நோய் தாக்கத்தினையும் பொருட்படுத்தாது சாதனை படைத்த மாணவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று(15) மாலை நடைபெற்றது.
குறித்த சிறுவனின் என்பு நோய் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணாவினால் ஒரு தொகை பணம் வழங்கி வைக்கப்பட்டது.
சாதனை
என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் லியோன்சனை அவரது வீட்டிற்குச் நேரில் சென்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணா ஆகியோர் சத்திர சிகிச்சைக்கான பண உதவியை வழங்கி வைத்தனர்.
அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் மாணவன் செல்வன் லக்ஷ்மன் லியோன்சன் ஒன்பது ஏ தர சித்திகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.
சிகிச்சைக்கு உதவி
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனிடம் சத்திர சிகிச்சைக்கு 40 இலட்சம் தேவைப்படுவதாக கூறியதை செவிமடுத்த அரசாங்க அதிபர் தம்மால் இயன்ற உதவியை பெற்றுத் தருவதாக கூறியிருந்தார்.
இன்று தனது வீடு தேடி சென்று ரூபாய் ஆறு இலட்சம் பண உதவி செய்த மாவட்ட அரசாங்க அதிபருக்கும், குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணாவுக்கும் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
