கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணருக்கு விளக்கமறியல்
வைத்தியசாலை பெண் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரை ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் ஒருவரையும் பெண் ஊழியர் ஒருவரையும் தாக்கியதாக கூறப்படும் விசேட வைத்தியரை காலி பொலிஸார் நேற்றுமுன்தினம் (17) கைது செய்தனர்.
பொலிஸ் விசாரணை
மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 61 வயதான விசேட வைத்தியர், தனியார் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு தனியார் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
